தவறான செயலில் ஈடுபட்ட பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றதாகவும், 21ம்
திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு
செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, 21ம் திகதி மாலை வட்டவளை பொலிஸாரால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, 22ம் திகதி மேற்படி சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பிக்குவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறித்த தோட்டத்தில் பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (23) பொலிஸாரால் பிக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிக்கு ஒருவரின் மோசமான செயலால் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை! கொதித்தெழுந்த மக்கள் (PHOTOS)

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
