பொத்துவில் போராட்டம் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை
கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் நடை பவணி இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்றைய தினம் புதன் கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் பொலிஸார், மன்னார் நீதிமன்ற எல்லைக்கு உற்பட்ட பகுதிக்குள் குறித்த பவனியானது உள் நுழைவதையும், எதிர்வருகின்ற சுதந்திர தினத்தையும் அல்லது இன ஒன்றுமையை குழப்புகின்ற வகையிலும் இன முரண்பாட்டை தோற்றுவிக்கின்ற வகையிலும் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், அதற்கான ஏற்பாடுகள் மன்னார் மாவட்டத்திற்குள் செய்யக்கூடாது என்ற தடையுத்தரவினை கோரி 14 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்து கட்டளையினை பெற்றுள்ளனர்.
இத்தடை உத்தரவானது இன்று 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மாநகர சபை மேயர் மணிவன்னன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கானது இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டு சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த சமர்ப்பணமானது பொது தொல்லையாக எற்படுவதாகவும் கோவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு கட்டளை கோரியிருந்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த கட்டளைக்கு எதிராக வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் விதிகளை கடந்து போராட்டங்கள் மேற்கொள்வது ஜனநாயக உரிமை எனவும் இது அரசியல் அமைப்பில் அங்கிகரிக்கப்பட்ட உரிமை எனவும் சட்டத்தரணிகளினால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பொலிஸாரால் கோரப்பட்ட கட்டளை மன்னார் நீதவான் நீதி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
