மகிந்தானந்த நளின் பெர்னாண்டோ மேன்முறையீட்டை விசாரிக்க நீதிமன்றம் திகதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் சதொச நிறுவனத்தின் அப்போதைய தலைவர் நளின் பெர்னாண்டோவுடன் இணைந்து இறக்குமதி செய்த கேரம் மற்றும் டாம் விளையாட்டுக்கான பலகைகளை மோசடியான முறையில் விநியோகித்த குற்றச்சாட்டில் இருவரும் தற்போதைக்கு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
விசாரணை நடவடிக்கைகள்
இந்நிலையில், குறித்த தண்டனைக்கு எதிராக இருவரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அதன்போது அவர்கள் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு, அன்றைய தினம் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |