கழுத்து அறுக்கப்பட்டு தம்பதியர் படுகொலை: பொலிஸார் விசாரணை
காலி - அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேசத்தில் கணவன், மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அல்கேவத்தையைச் சேர்ந்த பி.ஜயசிங்க (வயது 67), அவரின் மனைவி கமனி வீரதுங்க (வயது 63) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேற்படி தம்பதியின் மகள் சிகிச்சைக்காகக் கொழும்பு சென்றுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்த தந்தையின் தொலைபேசிக்கு மகள் அழைப்பு விடுத்த நிலையில் தந்தையிடமிருந்து பதில் இல்லாத காரணத்தால் உறவினர்களிடம் தந்தையைச் சென்று பார்க்கமாறு கூறியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
அதன்படி, உறவினர் சென்று பார்த்தபோது, வீட்டில் இரத்தக்கறை இருந்ததைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்தைச் சோதனை செய்தபோது, வீட்டுக்குள் தம்பதியர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam