டுபாயிலிருந்து ஆபத்தான நிலையில் நாடு திரும்பிய இலங்கையர் உயிரிழப்பு
டுபாயில் தாக்குதலுக்கு உள்ளாகி நாடு திரும்பி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் நேற்று (3) உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து ஆபத்தான நிலையில் நாடு திரும்பிய இவர் சுயநினைவினை இழந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிழிந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வஸ்கடுவ, பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த பி.டி. விமுக்தி குமார (வயது 36) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் இருந்தபோது, இரு நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரால் தாக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
அதிகாரிகள் மேலதிக விசாரணை
இதனையடுத்து கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவரின் தாயார் இன்று (4) நாடு திரும்பிய உடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரையின் பிரகாரம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் மல்கம் பேஜ் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |