இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை
இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அல் குமெய்னி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அண்மையில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் மிகக் குறைந்த அளவிலான ஓர் தண்டனை என அவர் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் மீண்டும் தாக்குதல்
தேவை ஏற்பட்டால் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈரானிய படையினர் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் பூரணமாக சட்டரீதியானது எனவும் இதில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலினால் எப்பொழுதும் ஹமாஸ் மட்டும் ஹிஸ்புல்லா இயக்கங்களை தோற்கடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன மக்கள் எதிரிகளினால் கையாடப்பட்ட தங்களது நிலத்தை பெற்றுக் கொள்வதற்காக போராடும் உரிமையுடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.