பஹான்துடுவ ஆபாச காணொளி வெளியிட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனை!
பலன்கொட பஹான்துடுவ நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொளியை பதிவு செய்து வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பஹான்துடுவ ஆபாச காணொளி நாட்டில் பெரும் சார்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த காணொளியுடன் தொடர்புடைய தம்பதியினருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அது ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தம்பதியினருக்கு 10,800 ரூபா அபராதமும் விதிப்பதாக பலங்கொட நீதவான் ஜயரூவான் திஸாநாயக்க அறிவித்தார்.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருக்கும், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான பெண் ஒருவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியை கடந்த 3ம் திகதி பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்திருந்தனர்.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri