நாளுக்கு நாள் மோசமாகி வரும் நாட்டின் நிலைமை:மீளும் வழியை கூறும் ரணில்
நாளுக்கு நாள் வங்குரோத்து அடைந்து வரும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற சிறந்த நற்சான்றிதழை சர்வதேச நாணய நிதியத்திடம் பெற முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் ஒரு நாட்டுக்கு வழங்கும் சான்றிதழை அடிப்படையாக கொண்டு உலகின் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளை பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாளுக்கு நாள் வங்குரோத்து அடையும் நாட்டை பாதுகாப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் னெ்று நடவடிக்கை எடுக்குமாறு தான் தொடர்ந்தும் கூறி வருவதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் சூம் தொழிற்நுட்படுத்தின் ஊடாக நடத்திய பேச்சுவார்த்தையில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் வங்குரோத்து அடைந்த நாடு என இலங்கைக்கு முத்திரை குத்தப்பட்டால், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதால், கிடைக்கும் பலன் மிகவும் குறைவாக இருக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.