நாட்டின் பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி - திலித் ஜயவீர
நாட்டில் பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மவ்பிம ஜனதா கட்சியின் (எம்.ஜே.பி.) தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான மாற்றத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாம் அரசியலுக்கு வருவேன் என்று எதிர்பார்த்தவன் அல்ல, எனினும் தமது பல்கலைக்கழக வாழ்க்கை முழுவதும், அன்பு, சிறந்த நாடு என்ற கொள்கைகளுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பிரமுகர்களை ஆதரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மாற்றத்தை உருவாக்க வேண்டும்
எனினும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதன் விளைவே, இன்று நாமே மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்ததாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவர் வீரசுமண வீரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, இராஜதந்திரி பாலித கொஹோன, இலங்கை பந்தய வீராங்கனை டிலந்த மாலகமுவ, முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் செஹான் அம்பேபிட்டிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
