நடிகர் விஜய்யின் கட்சி பெயரில் மாற்றம் - வெளியான காரணம்
நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியின் பெயரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த 2ம் திகதி விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தனது கட்சி பெயரையும் வெளியிட்டார்.

அவர் அறிவித்த 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சி பெயரில், 'க்' விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர்.
இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam