பதவி விலக முடியாது - கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் அறிவிப்பு
ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக பதவியை விட்டு விலகத் தயாராக இல்லையென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
அத்தோடு தான் ஒருபோதும் வைத்தியசாலையின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வைத்தியசாலையில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குழப்பமான சூழல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்த கருத்துக்கள் காரணமாக ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை கடந்த (16) பிற்பகல் சிற்றூழியர்கள் குழுவொன்று அவரது அலுவலகத்தில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்ததன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குழப்பமான சூழல் உருவானது.
மேலும் அதனை கட்டுப்படுத்த பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பதவியை விட்டு விலகத் தயாராக இல்லையென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam