மாவீரர் கல்லறைகளை சிதைத்தது நாட்டின் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் : நிரோஷ்
கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதைத்தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் (Nirosh) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும், வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிதத்தன்மை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக ஈகைச்சுடர் ஏற்றிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நினைவு கூர்தல் என்பது எமது உரிமையாகும். இன்றைய நிலையில் அவ் நினைவுகூறும் உரிமையினை இராணுவ பிரசன்னங்கள், அடாவடித்தனங்கள் ஊடாக தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவற்றுக்கு மேலாக பொலிஸார் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.
எமது மண்ணில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக இனத்தினை பாதுகாப்பதற்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவில் கொள்கின்றோம்.
அவர்களது தியாகங்கள் மாவீரர்களை புனிதர்களாக்கியுள்ளது.
இன்றும் இந் நாட்டில் எமது இனம் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கின்றது.
இன்றும் கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்கள் ஆக்கப்பட்டு வித்தடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளை சிதைத்து அரசு கோரத்தாண்டவமாடியுள்ளது.
உலகில் எங்குமில்லாத வன்முறை எண்ணம் இறந்தவர்களின் கல்லறையை சிதைத்த அரச இயந்திரத்திடம் தான் இருக்கின்றது.
எத்தனை தடவைகள் மாவீரர் துயிலும் இல்லங்களைச் அரச படைகள் சிதைத்தன என்பதை உலகமே அறியும்.
அவ்வாறாக கல்லறைகளை சிதைத்த உங்களால் எமது மக்களிடத்தில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை அகற்ற முடியவில்லை என்பதை கொடூரமாக யுத்தத்தினை முடித்து 12 ஆண்டுகளின் கழிந்த மக்களின் உணர்வுகளில் இருந்து அரசு உணர்ந்தே வருகின்றது.
இதனால் அரச கட்டமைப்பு எதிர்கொண்டிருக்கும் பயப்பீதியே சந்திக்கு சந்தியும் இராணுவத்தை நிறுத்தி மக்களை அச்சுறுத்தி அடக்க நினைப்பதற்கான காரணம் ஆகும்.
போரிட்டு மரணித்த மாவீரர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ, அவர்களது உரிமைகளுக்கு எதிராகவோ, அவர்களது தேசியத்திற்கு எதிராகவோ போரிடவில்லை.
எமது இனத்தின் அடையாளங்களும், நிலமும், பூர்வீகமும் திட்டமிட்டு காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட போது அதற்கு எதிராகவே போராடினர்.
எம் மூதாதையர் அகிம்சை வழியில் போராடிய போது அதற்கு மதிப்பளிக்காது அகிம்சை வழியையும் ஜனநாயகப் போராட்டத்தினையும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக நசுக்கியமையின் விளைவாகவே விடுதலைப்போராட்டம் ஆயுத மயப்படுத்தப்பட்டது.
அதில் உலகில் எங்குமில்லாத அளவுக்கு எமது மாவீரர்களின் தியாகங்கள் நிலைத்திருக்கையில் மாவீரர்களை நினைவேந்துவதும் வரலாற்றுக்கடமையும், தெய்வீகக் கடமையும் ஆகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 10 மணி நேரம் முன்

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri

ஒரு வருடத்திற்கு இந்த 3 ராசியையும் அசைக்க முடியாது....2023 வரை அசுர வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்! Manithan

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022