நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மக்கள் எரிபொருளுக்காக காத்திருப்பு (Photos)
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் எரிபொருளுக்காக மக்கள் காத்திருந்தமையை அவதானிக்கமுடிந்துள்ளது.
அதிலும் கித்துல்கல, அங்வெல்ல, அவிசாசளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல எரிபொருட்கள் நிரப்பு நிலையங்களிலும் இன்றைய தினமும் மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்தனர்.
புத்தாண்டு காலப்பகுதிகளில் எரிபொருள் போதியளவு விநியோகம் செய்யப்படும் என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
மக்கள் எரிபொருளை களஞ்சியப்படுத்த வேண்டியதில்லை எனவும், கொள்கலன்களில் எரிபொருள் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில்நீண்ட விடுமுறையைக் கொண்ட இந்த வாரத்திலும் மக்கள் பெருமளவு வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளது.
எரிபொருட்கள் நிலையங்களுக்கான எரிபொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றபோதிலும் அதனைப்பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை குறையவில்லையென எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இன்றைய தினம் எரிபொருட்களைப்பெற்றுக்கொள்வதற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதனால் கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
ஏற்கனவே எரிவாயு பெற்றுக்கொள்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
