நாட்டை மீட்டு எடுக்க ஐந்து ஆண்டுகள் போதும்: மைத்திரிபால சிறிசேன
இந்த நாட்டை ஐந்து ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுப்பதற்கு நீண்ட கால அவகாசம் கோர தேவையில்லை எனவும் எனினும் இவ்வாறு நாட்டை மீட்டெடுப்பதற்கு நேர்மையான ஓர் குழு ஒன்று தேவை என தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்க முடியும்
ஊழல், மோசடி, களவு போன்றவற்றில் ஈடுபடாத ஓர் தரப்பினரால் மட்டும் இந்த நாட்டை துரித கதியில் மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியலுக்கு வரும் 60 முதல் 65 வீதமானவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றுக்கு புதிதாக தெரிவாகும் பலர் தங்களுடைய நடை, உடை, பாவனை என்பவற்றையும் மாற்றிக்கொள்வதாகவும், கொழும்பிலே தங்கி விடுவதாகவும், தங்களது தொகுதிக்கு திரும்ப செல்வது இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல்வாதி தூய்மையானவராக இருக்க வேண்டும்
அவர்கள் கொழும்பில் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நேரத்தை செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதி தூய்மையானவராக இருக்க வேண்டும் என்றும் அரசியல்வாதி தனது குடும்பத்தை பலப்படுத்தக்கூடிய ஒருவராக இருக்கக் கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |