சர்வதேச சமாதான மாநாட்டின் புதிய தலைவரானார் மைத்திரிபால சிறிசேன
சர்வதேச சமாதான மாநாட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கம்போடியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
உலக சமாதான மாநாட்டின் அழைப்பின் பேரில் சென்றிருந்த அவர் நேற்று இரவு(25.07.2023) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் கம்போடியாவில் நடைபெற்ற தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்போடிய தேர்தல்

விமான நிலையத்திற்கு வந்த பின்னர் கம்போடியாவில் நடைபெற்ற தேர்தல் குறித்து பேசிய அவர், ஊழலோ
வன்முறையோ இல்லாமல் பாரபட்சமின்றி அந்த தேர்தல் நடத்தப்பட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய அமைதி மாநாட்டின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் 80 உறுப்பு நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam