நோபல் பரிசு வழங்கல் விழாவில் பங்கேற்க அழைப்பு மறுக்கப்பட்ட நாடுகள்
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு நோபல் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு சுவீடனை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
உக்ரைன் மீதான போர் மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யா எதிர்த்தமை ஆகியற்றை காரணமாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பு காரணமாக நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷ்யா,பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நோபல் அறக்கட்டளை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
