ஆரியகுளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈ.பி.டி.பி வலியுறுத்து
வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்ச நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்ட காலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளமையால் அவற்றை கால தாமதமின்றி விரைவுப்படுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர் சமர்பிக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினரும்,சிரேஸ்ட மனித உரிமை சட்டத்தரணியுமான றெமீடியஸ் முன்வைத்த யோசனைக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வும், புதிய ஆண்டின் முதலாவது அமர்வும் இன்று நடைபெற்றது. இதன்போதே குறித்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த உறப்பினர் றெமீடியஸ்,
வட மாகாணத்திற்கான விஜயமொற்றை முன்னெடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் வருகைதரவுள்ள நிலையில், வடக்கு - கிழக்கை சேர்ந்த மேன்முறையீட்டுக்காக சமர்ப்பித்தும் இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
தேங்கியுள்ள வழக்குகளை விரைவுபடுத்துமாறும் காலதாமதத்தை தவிர்த்து நீதிக்காக காத்திருக்கும் தரப்பினருக்கு விரைவான தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் எமது சபையின் ஊடாக ஒரு முன்மொழிவை நிறைவேற்றி அதனை குறித்த ஆவணங்களுடன் அவரிடம் சமர்ப்பித்து வலியுறுத்துவது தொடர்பில் றெமீடியஸ் அதனை ஒரு முன்மொழிவாக சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறித்த யோசனையை சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதுடன் குறித்த ஆவணங்களை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது.
இதேவேளை ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கடிதம் ஒன்று தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த கடிதத்தில் தேர்தல் ஆனைக்குளு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் வரையறை செய்துள்ளதுடன், அவ்வாறு ஒழுக்கம் மற்றும் சட்டவரையறையை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவரை நீக்கவோ அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மணிவண்ணனால் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே வாகன பகுதியில் ஒரே ஒரு அதிகாரியே இருப்பதால் வாகனங்களில் ஏற்படும் சாதாரண பழுதுகளை கூட உடனடியாக செய்ய முடியாதிருப்பதால் அவரது அதிகாரத்தை மேலும் பலருக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் சபையில் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக இறுதியாக நடைபெற்ற குறித்த கண்காட்சிக்காக மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய நிதியான 30 இலட்சம் இதுவரை செலுத்தப்படாதிருந்ததாகவும் அதில் 10 இலட்சம் தற்போது குறித்த தரப்பினரால் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மிகுதி பணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதேநேரம் இம்முறை இறுக்கமாக வர்த்தக கண்காட்சியில் ஸ்ரோல் ஒன்றின் அறவீடு குறைப்பு மாநகரசபை இறுக்கமாக இருக்க வேண்டும் என்றும் நுழைவுச் சீட்டு உள்ளிட்ட விடயங்களில் மோசடி இடம்பெறாத வகையில் கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட வேண்டும் எனவும், வலியுறுத்தப்பட்டதுடன் அவ்வாறு மோசடிகள் காணப்பட்டால் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 3 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஆரியகுளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்பகுதியை புனரமைக்கும் போது இருந்துவந்த நிலை தற்போது மாறி பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தேறி வருவதால் அப்பகுதியில் சிசிரிவி பொருத்தல் அவசியம் என்றும் அதன் பாதுகாப்பையும் புனிதத் தன்மையையும் உறுதி செய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கஞ்சியும் செல்ஃபியும் 1 நாள் முன்

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்.. தந்தையின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு.. Cineulagam

பிரபல பாடகி சங்கீதா கொன்று புதைப்பு! மாயமான 12 நாட்களுக்கு பின் சிதைந்த நிலையில் கிடைத்த சடலம் News Lankasri

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி - பணத்திற்கு பஞ்சமே இருக்காது... அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்! Manithan

அஜித்தின் திருப்பதி படத்தில் சதாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?- தற்போது கூறிய இயக்குனர் Cineulagam

55 வயதில் கனடா சாக்லேட் நிறுவனத்தில் வேலை! மகிழ்ச்சியில் துள்ளிய நபருக்கு தெரியவந்த உண்மை... எச்சரிக்கை செய்தி News Lankasri

ரஷ்ய செல்வந்தர் செய்த சமயோகிதச் செயலால் அவர் மீதான தடையை நீக்கவேண்டிய நிலையில் சுவிட்சர்லாந்து News Lankasri

மேஷ ராசியில் சுக்கிரன்! 25 நாட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்: யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்? Manithan
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022