உலக பொருளாதார சுட்டியில் மீண்டும் பின்தள்ளப்பட்ட இலங்கை
இலங்கையில் நுகர்வோரின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது உலக தரப்படுத்தலில் 131 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் Numbeo என்ற கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை நுகர்வோரின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது 2013 இல் உலகில் 90 ஆவது இடத்திலிருந்து 10 வருடங்களுக்குள் 131 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கையின் கொள்வனவு வளர்ச்சி வீதம்
2020 ஆம் ஆண்டளவில் கோவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக இலங்கை 112 வது இடத்தில் இருந்ததாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
மேலும், 30 மாதங்களுக்குப் பிறகு, 131 வது இடத்திற்கு தீவிரமாக இலங்கையின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் நுகர்வோரின் தேவையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் இது நிகழ்ந்துள்ளது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சுட்டெண்ணின் படி, அண்டை நாடான இந்தியாவில் நுகர்வோரின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது உலகில் 45 வது இடத்திலும், பங்களாதேஷ் 107 வது இடத்திலும், பாகிஸ்தான் 114 வது இடத்திலும், காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |