ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய புதிய தகவல்கள்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவராலயத்தின் (The United Kingdom) முன்னாள் கொன்சுயூலர் அருன புஸ்ப சோமசிறி பெர்ணான்டோ வழங்கிய 'பி' அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கும் விடயங்களில் சிக்கல் காணப்படுவதாக கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09-02-2026) ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சாட்சியங்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த போது 'பொய்லர்' உடைந்திருந்ததாகவும் அதை செய்வதற்கு 15000 பவுண் கேட்டதாகவும் அதை கொடுக்கவில்லை எனவும். ஆனால் ஜனாதிபதி விஜயத்திற்காக 45000 பவுண் வழங்கியதாகவும் அதை தனது மனசாட்சிக்கு உட்பட்டு வழங்கவில்லை என 'பி' அறிக்கையில் அருன புஸ்ப சோமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரித்தானியாவில் செப்டம்பர் மாதம் அந்த நாட்டின் வெப்பநிலை மாற்றத்தின் பிரகாரம் குளிர்காலமில்லை.செப்டெம்பர் 11 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி பிரித்தானியாவின் வெப்பநிலை செல்சியஸ் 24 c ஆகும்.

அந்த காலப்பகுதியில் நாட்டில் வெளியிட்ட காலநிலை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.செல்சியஸ் 24 c வெப்பநிலை காணப்படும் போது ஏன் 'பொய்லர்' தேவைப்படுகிறது.
'பொய்லர்' தேவைப்படுவது குளிரான காலத்திலாகும்.பிரித்தானியாவில் குளிர் காலநிலை நெவம்பர் மாதமே ஆரம்பமாகிறது. யாரோ ஒருவரின் அழுத்தத்தில் அவர் அப்படி சொன்னரா என்ற சந்தேகம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.