வேகமாக பரவும் வைரஸ்! மிக ஆபத்தான நிலையில் இலங்கை
கோவிட் -19 வைரஸ் இலங்கைக்குள் தற்போது மிக வேகமாக பரவி வருவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள வலையெளி தளம் ஒன்று வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் உடனடியாக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும்.
இலங்கை தற்போது கோவிட் 19 வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது.
வைரஸ் பரவல் தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வழங்குவதில்லை. இது மிகவும் சிக்கலான நிலைமை எனவும் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri