கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் கிளிநொச்சியிலும் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 1200 பேருக்குத் தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டோருக்குக் குறித்த தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கொவிட் 19 தடுப்பு ஊசிகள் வழங்கப்படுவதாகவும், 1200 பேருக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.