வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கோவிட் தொற்று! 31 பேர் தனிமைப்படுத்தலில்
வவுனியா - இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அங்கு பணியாற்றும் 31 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் குறித்த நபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கோவிட் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதனையடுத்து குறித்த நபருடன் தொடர்புடைய 31 ஊழியர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதுடன் அவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
