இந்தியாவின் மகாராஷ்டிராவில் சடுதியாக அதிகரிக்கும் கோவிட் தொற்று
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ( 25) மாத்திரம் 28 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் அந்த மாநிலத்தில் கோவிட் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒன்பது பேருக்கு கோவிட் JN.1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுகாதார துறை தகவல்
புதிதாக கோவிட் தொற்றினால் பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அந்த மாநிலத்தில் இதுவரை கோவிட் தொற்று மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் "மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 11 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் அதி தீவிர சிகிச்கைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் வைத்தியர்களின் மேற்பார்வையில் உள்ளனர்” என சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri