ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து மீட்கப்பட்ட 5 பிணைக் கைதிகளின் உடல்கள்: இஸ்ரேல் இராணுவம் தகவல்
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் சடலமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகின்ற நிலையில் ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 20,424 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.
போர் நிறுத்த கோரிக்கைகள்
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, காசாமுனையில் உள்ள பிணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுவித்துள்ளதோடு, பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுப்பட்டு வந்தது.
இந்நிலையில், காசாமுனையில் உள்ள 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மீட்கப்பட்ட சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 14 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
