நடு வீதியில் பிள்ளையை பிரசவிக்க கூறியதாக இராணுவத்தினர், பொலிஸார் மீது குற்றச்சாட்டு
கிளிநொச்சி - தர்மபுரம், நெத்தலியாரு பகுதியில் மக்கள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து முல்லைத்தீவிற்கு செல்வதற்காக வந்த இளம் கர்ப்பிணி தாயொருவருக்கு, நடு வீதியில் பிள்ளையை பிரசவிக்குமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கூறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் அதிகளவில் கோவிட் தொற்றாளர்கள் பதிவாகுவதாக தெரிவித்து அப்பகுதியில் தனிமைப்பத்தல் மற்றும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே அத்தியவசிய சேவைகளுக்காக குறிப்பாக மருத்துவ தேவைகள் நிமித்தம் செல்ல முயற்சித்த கர்ப்பிணி பெண், புற்றநோய்க்கு இலக்கான பெண் ஆகியோரை செல்லவிடாது மறித்துள்ளதாக தெரியவருகிறது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
