மொரவெவ பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா - நால்வர் தனிமைப்படுத்தலில்
திருகோணமலை - மொரவெவ பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய 4 பேரை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக வைத்திய சாலைக்கு மருந்து எடுப்பதற்காக சென்ற போது குறித்த நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இருவரையும் கோமரங்கடவல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தொடர்ந்தும் பிரதேசத்தில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ச்சியாக முகக் கவசங்களை அணியுமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam