ஐரோப்பாவில் மீண்டும் கோவிட் பரவல் : அதிருப்தியில் உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பாவில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளமை குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்காது போனால், எதிர்வரும் மார்ச் மாதமளவில் மேலும் 5 லட்சம் கோவிட் மரணங்கள் ஏற்படக் கூடும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் கலாநிதி ஹான்ஸ் க்ளுக் எச்சரித்துள்ளார்.
முகக்கவசங்களை அணிய வேண்டும் என்ற சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குளிருடன் கூடிய காலநிலை, மந்தகதியிலான தடுப்பூசி செலுத்தல், டெல்டா திரிபின் பரவல் என்பன ஐரோப்பாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
கோவிட் பரவல் அதிகரித்துள்ளமை காரணமாக ஐரோாப்பிய நாடாக ஒஸ்ரியா, 20 நாட்களுக்கு நாட்டை முற்றாக முடக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.