இரு மரண வீடுகளில் இருவருக்கு கோவிட் தொற்று
பதுளை, ஹல்துமுல்லை அம்லகம பிரசேத்தில் இடம்பெற்ற இரு மரணவீடுகளில், இருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மரணவீட்டில் பங்கேற்ற அனைவரும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அசங்க சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
மரணவீடு இடம்பெற்ற பகுதியில் பாடசாலை ஒன்றும் உள்ளதால், சுகாதார நிலைமையைக் கருத்தில்கொண்டு மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதைப் பெற்றோர் தவிர்த்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் 74 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பாடசாலையில் கிருமித் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப்
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேலும் கூறியுள்ளார்.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam
