முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கு கோவிட் தொற்று
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு(Chandima Weerakody) கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் நேற்று காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்திம வீரக்கொடி, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமையிலான அரசாங்கங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கடந்த தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அவருக்கு அமைச்சு பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.
சந்திம வீரக்கொடி அண்மைய காலமாக தற்போதைய அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.