வவுனியாவில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியாவில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (05.06) இரவு வெளியாகின.
அதில், சூசைப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த கர்ப்பவதிப் பெண் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாரம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், ஆடைத் தொழிச்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் என 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா சகாயாமாதாபுரம் பகுதியில் நேற்று (04.06) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியாவில் 18 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும்
சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri