வவுனியாவில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா தெற்கு மாமடு பகுதி சுகாதார திணைக்கள சாரதி உட்பட 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.
அதில், திருநாவற்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், மாரா இலுப்பை பகுதியில் ஒருவருக்கும், எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் இருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், கோமரசங்குளம் பகுதியில் இருவருக்கும், வைகறையைச் சேர்ந்த இருவருக்கும்,
குருமன்காடு பகுதியில் ஒருவருக்கும், மாமடு பகுதியில் சுகாதார திணைக்கள சாரதி ஒருவருக்கும் என 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் கிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும்
சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri