ஐயப்பன் வழிபாட்டில் பங்கேற்ற கொரோனா தொற்றாளர்! - முல்லைத்தீவில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தல்
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோம்பாவில் கிராமத்தைச் சேர்ந்த மரக்கறி மொத்த விற்பனையாளர் ஒருவர் இன்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, அவர் இன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ஆலய வழிபாடு ஒன்றில் பங்குபற்றியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐயப்பன் விரதத்தில் வழமையாக ஈடுபடுகின்ற, அவர் இன்று ஐயப்பன் விரத இறுதி நாள் வழிபாட்டுக்காக குறித்த ஆலயத்துக்குச் சென்றிருந்தார்.
புதுக்குடியிருப்புக்கும் - கைவேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குறித்த ஆலயத்தில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 40 இற்கும் மேற்பட்டவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை என்ற தகவல்களைப் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சேகரித்துள்ளனர்.
இதேவேளை, வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதன் தொடராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொற்றாளர் தனக்கு நெருக்கமானவர்கள் என்று 24 வரையான நபர்களை இதுவரை அடையாளம் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri