தென்னிலங்கையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா
தென்னிலங்கையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்த இரண்டு நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்த நபர்கள் இருவருக்கு கொரோனா தொற்றியிருந்தமை இன்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர் ருவன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் குருந்துவத்தை கிங்தொட்டை மற்றும் டக்கியாவத்தை தலாப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்த முறையே 59 மற்றும் 77 வயதுடையவர்களாவர்.
குறித்த இருவரும் தங்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீட்டிற்கு சென்றவர் என காலி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இரண்டு சடலங்களும் இன்றைய தினம் தகனம் செய்யப்படவுள்ளன.




