சுகாதார அமைச்சில் பத்து பேருக்கு கொரோனா தொற்று!
சுகாதார அமைச்சில் இருந்து பத்து கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சுகாதார அமைச்சின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படவில்லை என்று சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வைரஸைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தற்போது இந்த வைரஸ் சுகாதார அமைச்சில் மற்றவர்களுக்கு பரவக்கூடும் என்ற அச்சம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சின் ஒரு பிரிவில் இருந்து ஏழு தொற்றாளர்கள் பதிவாகினர்.
மேலும் மூன்று தனித்தனி பிரிவுகளில் இருந்து மேலும் மூன்று தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டனர் என்றும் ஹேந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri