ஆரம்ப பிரிவு மாணவர்களில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதி?
ஆரம்ப பிரிபு பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்வாறு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மாணவர்களும் ஆசிரியர்களும் பலவந்தமான அடிப்படையில் அதிபர்களினால் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தொழிற்துறைசார் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri