தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மேலும் சில விலங்குகளுக்கு கோவிட் தொற்று
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்களுக்கு கோவிட் தொற்றியுள்ளமை பிசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிடம் வினவிய போது, அவ்வாறான அறிக்கை ஒன்று கிடைத்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த விலகுங்களுக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு அதனை உறுதி செய்துக் கொள்ளுமாறு மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அறிக்கை எப்படியிருந்தாலும் அந்த 4 மிருகங்களும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதென இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் தகவல் கிடைத்த பின்னர் குறித்த 4 விலங்குகளும் ஏனைய விலங்குகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகிய போதிலும் தற்போது அந்த சிங்கங்கள் ஆரோக்கியமாக உள்ளன.
மிருகக் காட்சி சாலைகளை திறப்பதற்கு சுகாதார பிரிவுகளிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ள போதிலும் கோவிட் அச்சம் காரணமாக தெஹிவளை மிருகக்காட்சி சாலையை திறக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
