உயர் திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் சிலருக்கு கோவிட்
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள உயர் திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் சிலருக்கு கோவிட் -19 தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த மத்திய நிலையத்தை மூட இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உயர் திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் பிரதான பயிற்சி ஆலோசகரான முன்னாள் வேக பந்து வீச்சாளருக்கு முதலில் கோவிட் 19 வைரஸ் தொற்றி இருப்பது அடையாளம் காணப்பட்டதுடன் அதன் பின்னர் அங்கு சேவையாற்றும் வெளிநாட்டு உடற்பயிற்சியாளர் ஒருவருக்கும் கோவிட் 19 தொற்றியுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சில கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அனைத்து தொற்றாளர்களும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தின் தொழில் புரியும் ஏனைய ஊழியர்களை பிரதேசத்திற்கு நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள உயர் திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தை அடுத்த சில தினங்களில் திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri