வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா! தொழிற்சாலைக்கு பூட்டு
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் பி.காமதேவன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வெளியான அறிக்கையில் நான்கு ஆண்கள், ஆறு பெண்களுமாக 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பைப் பேணிய 60 பேருக்குக் கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.
இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகிய போது மேற்படி பத்து பேருக்குத் தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது
. இவர்களில் நான்கு பெண்கள் வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ள 60 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
