இந்தியாவில் தீவிரமடையும் கோவிட் தொற்று! வேகமாக அதிகரிக்கும் நோயாளர்கள்
இந்தியாவில் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கோவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவிட் மரணங்கள்
கேரளாவில் 1,147 பேரும் மகாராஷ்ட்ராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் தமிழகத்தில் 148 பேரும் குஜராத்தில் 223 பேரும் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை இந்தியாவில் 07 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
தொற்றுநிலை மீண்டும் உயரும் நிலையில், பல மாநிலங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி, மற்றும் தடுப்பூசி தொடர்பான நடைமுறைகள் மீண்டும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மீண்டும் கோவிட் 19
ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுவதாவது, "கோவிட் 19 இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்" என தெரிவித்துள்ளனர்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
