இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரால் ஆரம்பிக்கப்பட்ட கார்ன்ஹோல் விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் (Tillakaratne Dilshan), கொழும்பில் சிலோன் கார்ன்ஹோல் கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்மூலம் புதிய விளையாட்டு ஒன்றை டில்ஷான் இன்று (09) நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
கார்ன்ஹோல் ( Cornhole) எந்த வயதினரும் இரசிக்கக்கூடிய ஒரு விளையாட்டு. இது அமெரிக்காவில் பிரபலமானது மற்றும் மிகவும் மகிழ்ச்சியான விளையாட்டாகும் என்று அவர் கூறினார்.
இலங்கை வீரர்கள்
இந்த விளையாட்டின் மூலம் இலங்கை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும் என டில்ஷான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு உலக கார்ன்ஹோல் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு இலங்கையிலிருந்து ஒரு அணியை களமிறக்குவேன் என்று தான் நம்புவதாக திலகரத்ன டில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        