ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தெரிவாகியுள்ள இலங்கை
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் (UNGA) இலங்கை, ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) 2025ஆம் ஆண்டு முதல் மூன்று வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெற்ற தேர்தலில், இலங்கை அங்கம் வகிக்கும் 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, பிராந்தியத்திலிருந்து 2வது அதிகூடிய வாக்கு எண்ணிக்கையையும், ஒட்டுமொத்தமாக 7வது அதிக வாக்கு எண்ணிக்கையையும் பெற்றுள்ளது.
இலங்கை இதற்கு முன்னர் 1985 - 1989 மற்றும் 2006 - 2008 வரை இந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆசிய பசிபிக் பிராந்தியம்
இந்த சபையின் மூலம் வறுமையை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு, அபிவிருத்திக்கான நிதியுதவி, பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு சிறந்த ஆதரவளிக்கும் சர்வதேச நிதிக் கட்டமைப்பின் சீர்திருத்தம், காலநிலை நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான கவுன்சிலின் முயற்சிகள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பிளவைக் குறைத்தல் போன்றன முக்கிய நோக்கங்களாக கொள்ளப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நாடுகளில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து உஸ்பெகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சு மற்றும் அதன் வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் தலைமையிலான இலங்கையின் இராஜதந்திர ஈடுபாட்டிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri