டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை
பிரதி அமைச்சர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
டெங்கு வைரஸ் வகைகள் மாறிவரும் நிலை, நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான மாற்றங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் Aedes aegypti நோய் பரப்பி அதிகரித்திருக்கும் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, மாவட்ட மட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
டெங்கு கட்டுப்பாடு என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டும் அல்ல. அனைத்து நிறுவனங்களின், உள்ளூராட்சி மன்றங்களின் மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் செயற்பாட்டு பங்களிப்பும் அவசியமானதாகும்.
காலத்திற்கேற்ற நடவடிக்கைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு, தொடர்ச்சியான சுத்தம், முறையான கழிவு முகாமைத்துவம், கொசு பெருகும் இடங்களை அகற்றுதல் மற்றும் அனைத்து மட்டங்களிலும் வலுவான ஒருங்கிணைப்பு மூலம் இந்த அபாயத்தை குறைக்க முடியும்.
இக்கூட்டம் மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை, உள்ளூராட்சி மன்றங்கள், பொது நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அரச துறைகளின் பங்கேற்புடன், நேரடி மற்றும் இணைய வழி இணைந்த முறையில் நடைபெற்றது.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam