பொருளாதார ஏற்ற தாழ்வுகளை தகர்த்த சமையல் எரிவாயு:மேல் தட்டு முதல் கீழ் தட்டு வரை பாதிப்பு
தொடர் மின் துண்டிப்பு, சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் மண் எண்ணெய் பற்றாக்குறை என்பன காரணமாக மேல் வகுப்பு முதல் வறிய குடிசைகளில் வாழும் மக்கள் வரை தமது உணவை சமைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலருக்கு தமது மூன்று வேளை உணவை சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்புக்கு தொழிலுக்காக வந்து, தங்கும் விடுதிகள் அல்லது வாடகை வீடுகளில் தங்கியிருப்போரில் பெரும்பாலானோர் தமது அறைகளில், வீடுகளில் உணவை சமைக்க முடியாது, உணவகங்களில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சமையல் எரிவாயு நெருக்கடி காரணமாக கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மூடப்படடுள்ளதால், அவற்றை நம்பி வாழ்ந்த இவர்கள் உணவின்றி கடும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாளுக்குள் நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், செலவுக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்படாமையால் இவர்களால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சமைத்த உணவின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், உணவகங்களில் சாப்பிடுவது தற்போது மிகப் பெரிய பொருளாதார சவாலாக மாறியுள்ளது. பல உணவகங்களில் உணவுகளில் தரமும் குறைந்துள்ளது.
இப்படியான நிலைமையில், கீழ் வகுப்பு மற்றும் மத்திய வகுப்பு மக்கள் தமது உணவு வேளைகளை குறைத்துக்கொண்டு எப்படியோ அன்றாடம் தமது பசியை போக்கி வருகின்றனர்.
இந்த நிலைமையால் கர்ப்பிணி தாய்மார், பாலுட்டும் தாய்மார் மற்றும் சிறுப்பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் சில நாட்களுக்கு தேவையான இறைச்சி, மீன், காய்கறிகள், பழங்களை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சாரம் துண்டிக்கப்படுவதால், அதிக விலை கொடுத்து வாங்கிய இந்த உணவுகள் பழுதடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் இறைச்சி, மீன், பழங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதில்லை.
மேல் தட்டு மக்கள் மற்றும் சில மத்திய வகுப்பு மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுகளை சமைப்பதுண்டு. எனினும் மின் துண்டிப்பு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலைமையானது எதிர்காலத்தில் நாட்டில் மக்கள் மத்தியில் போஷாக்கின்மை உருவாக்கும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
