17 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை
17 ஆண்டுகளுக்கு முன்னர், தெஹிவளை நெடிமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரைக் கொல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக
2008 ஜனவரி 17ஆம் திகதியன்று போதைப்பொருள் சரக்குகளை ஏற்றிச் சென்ற காரில் பயணித்த குற்றவாளியை, பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது, இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் சுமத்தியிருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



