தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கியஸ்தர் மீது எழுந்துள்ள சர்ச்சை
மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பாளர் ரூவான் போபகேயின் ஆதரவு பிரசார கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும், தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கியஸ்தருமான அருந்தவராஜா (மேழிக்குமரன்) கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் ரூவான் போபகேக்கு ஆதரவான பிரசார கூட்டம் நேற்று (01.09.2024) இடம்பெற்றது.
அரசியல் உயர் பீட உறுப்பினர்
இதன்போது கூட்டத்தில் ஈபிஆர்எல்எப் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும் கலந்து கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரூவான் போபகே அரகல போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர் ஆவார்.
குறித்த உறுப்பினரே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக் கட்டமைப்பில் வவுனியா மாவட்ட நிதி கையாளுகைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
