ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் உடைந்தது தமிழரசுக் கட்சி..!
இலங்கை தமிழரசு கட்சி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக நேற்ற அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
இருப்பினும், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்காமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
அதேவேளை, குறித்த மத்தியகுழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தெரிவித்திருந்ததுடன் கட்சி செயலாளருக்கும் இதை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் ஆதரவு குறித்து யாரை தெரிவு செய்கின்றோம் என்பதை விட தெரிவு சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது மிக முக்கியம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி, தலைமைத்துவமின்றி எடுக்கப்பட்டுள்ள கட்சியின் இந்த தீர்மானம் கண்டிக்கதக்கது என கூறிய அவர், மேலும் முன்வைத்துள்ள கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam