வசந்த சமரசிங்கவின் சொத்து மதிப்பு.. சர்ச்சைக்கு விளக்கம்
தன்னிடம் உள்ள 27 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், தனது தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்டதாகவும் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் அதனை வளர்த்துக்கொண்டதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எங்கள் கிராமம் தம்புத்தேகம ஆகும். அங்குள்ள அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினரை நன்றாகத் தெரியும்.
குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்கள்
தம்புத்தேகமவிலிருந்து கொழும்புக்கு வந்து, களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர், நான் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தேன்.
மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் வேறு எதுவும் செய்யாமல் அரசியலில் மட்டுமே ஈடுபடுவதாக சிலர் தவறாக எண்ணுகின்றனர்.
சம்பளம் பெறாமல் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்று சிலர் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர்.
நாங்கள் அரசியலில் ஈடுபடும் அதேவேளை வணிகத்திலும் ஈடுபடுகின்றோம். அத்துடன், எனது குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்களும் என்னிடம் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
