சர்ச்சையை உருவாக்கியுள்ள மில்லரின் ஆட்டமிழப்பு - முழுமைப்பார்வை
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற இருபதுக்கு20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சூர்ய குமார் யாதவின் (Surya Kumar Yadav) பிடியெடுப்பு சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தென்னாபிரிக்க அணி வெற்றி பெற இறுதி ஓவருக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய முதல்பந்தை டேவிட் மில்லர் (David Miller) லோங் - ஆஃ (Long-off) திசைக்கு அடித்தார்.
கிட்டத்தட்ட 6 ஓட்டங்களை நோக்கி சென்ற பந்தை துல்லியமாக தடுத்து நிறுத்திய சூர்ய குமார் யாதவ், பந்தை பிடித்து மில்லரை ஆட்டமிழக்கவும் செய்தார்.
தீர்மானம் சரியானது
இதுவே, இறுதிப்போட்டியின் தீர்மானம் மிக்க வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தது.
குறித்த பிடியெடுப்பு மூன்றாம் நடுவரால் நன்கு பரிசீலிக்கப்பட்டு முடிவு வழங்கப்பட்டிருந்தாலும், சூர்யாவின் கால், பௌண்டரி எல்லைக்கோட்டை தொட்டதாக சில கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
Surya Kumar yadav
— Ankit kumar (@Ankitkumar60935) July 1, 2024
Match changing catch ??
World Cup winner ??? pic.twitter.com/KpUZgycVyI
இந்நிலையில், தென்னாபிரிக்காவின் முன்னாள் சகலதுறை வீரர் ஷான் பொலக் (Shaun Pollock) இது தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
பௌண்டரி எல்லைக்கோடு சிறிதளவில் அசைந்த போதிலும், சூர்ய குமார் யாதவின் கால் பௌண்டரி எல்லைக்கோட்டை தொடவில்லை எனவும் இதனால் மூன்றாம் நடுவரின் தீர்மானம் சரியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகுதியான அணி
ஷான் பொலக்கின் கருத்தின் மூலம் பௌண்டரி எல்லைக்கோடு அசைந்ததுக்கும் சூர்ய குமார் யாதவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என தெரியவருகின்றது.
அதிர்வு அல்லது காற்று போன்ற காரணிகளால் எல்லைக்கோடு அசைந்திருக்கலாம்.
சூர்ய குமார் யாதவின் காலுக்கும் பௌண்டரி எல்லைக்கோட்டிற்கும் குறிப்பிடத்தக்க இடைவெளி ஒன்று இருந்ததை மூன்றாம் நடுவரின் மறுபரிசீலனையின் போது அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும், தொடர் முழுவதும் சிறப்பாக செயற்பட்ட இந்திய அணி கிண்ணத்தை சுவீகரிக்க தகுதியான அணி என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
