ஒபரேஷன் சிந்தூரில் தாக்கப்பட்ட இந்திய விமானங்கள்! சர்ச்சையாகிய அதிகாரியின் கருத்து
ஒபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் இந்திய விமானப்படை போர் விமானங்களை இழந்ததாக இந்தோனேசியாவில் வெளியானிய கருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் இடம்பெற்ற கருத்தரங்கில் இந்திய கடற்படை தளபதி சிவகுமார் தெரிவித்த கருத்தே இவ்வாறு பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு, இந்திய அரசு இந்த இழப்புகளை மறைத்து நாட்டை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய விமானப்படை
இதன்படி இந்திய பாதுகாப்பு படைத் தலைமை (CDS) ஜெனரல் அனில் செளகான், ஒபரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானப்படை விமானங்களை இழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் கூறியதை போல “ஆறு விமானங்கள் இழப்பு” என்ற கூற்று முற்றிலும் தவறு என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு விமான இழப்பு மனித தவறு காரணமாக ஏற்பட்டதாகவும், அதன் பிறகு இந்தியா தனது உத்தியை மாற்றி, அடுத்த இரு நாட்களில் இழப்பு இல்லாமல் தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மே 11, 2025 அன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், விமானப்படை டி.ஜி.ஏ.ஓ ஏர் மார்ஷல் ஏ .கே பார்தி, “போர் சூழலில் இழப்புகள் ஏற்படுவது இயல்பு” என்று கூறி, இந்தியாவின் முக்கிய இலக்கான பயங்கரவாத முகாம்களை அழித்ததை வெற்றியாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒபரேஷன் சிந்தூர்
இந்தோனேசியாவில் சிவகுமாரின் கருத்து, இந்தியாவின் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க ஒன்றிய அரசு அனுப்பிய குழுவின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த குழு ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் பதிலடி தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல் பரப்புதல் குறித்தும் குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஒபரேஷன் சிந்தூர் மூலம் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் பொதுமக்களுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியது.
இந்த சர்ச்சை, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தையும், தகவல் போரின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.