வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை(Photos)
வவுனியாவில் அண்மைக்காலமாக பெய்த மழையினால் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக பொதுமக்களின் இருப்பிடங்கள், பாடசாலைகள், அரச திணைக்களங்கள் அனைத்திலும் நேற்று(22) சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்கள், வங்கிகள், விருந்தினர் விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் இருப்பிடங்கள் என்பவற்றில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு டெங்கு குடம்பி நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் தமது இருப்பிடங்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் அரச நிறுவனங்கள் என்பனவற்றை துப்பரவு செய்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த வரும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
மக்களுக்கான அறிவுறுத்தல்
மேலும் தமது இருப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் டெங்கு நுளம்பு பெருகும்
இடங்கள் அடையாளம் காணப்பட்டால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டு அவர்களுக்கு
எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு
வருகின்றன.




